Header Ads



உங்களுக்குள்ளேயே (பல சான்றுகள் உள்ளன) நீங்கள் சிந்திக்க வேண்டாமா...? 📖 அல்குர்ஆன் : 51:21


📌 உடலின் அனைத்து பாகங்களின் வலியையும் உணரும் மையம் மூளையாக இருந்த போதிலும் மூளை ஒருபோதும்  வலியை உணராது.

📌 மூளை தூங்குவதில்லை. இன்னும் சொன்னால் கண் விழித்திருக்கும் நேரத்தை விட உறங்கும் போதுதான் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.


📌 நாம் கேட்கும், பார்க்கும், படிக்கும், உணரும், தொடும் மற்றும் சுவாசிக்கும் அனைத்தையும், நம் மூளை சேமிக்க வல்லது.


📌 மூளை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. மூளையின் வலது பகுதி உடலின் இடது பாகுதியையும், அதன் இடது பகுதி உடலின் வலது பாகுதியையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றன. 


📌 18 வயதோடு மூளை தனது வளர்ச்சியை நிறுத்திக் கொள்கிறது. 


📌 மூளைக்கு 8 தொடக்கம்  10 வினாடிகள் வரை இரத்த ஓட்டம் கிடைக்காவிட்டால் அது சுய நினைவை இழந்துவிடும்.


📌 மூளைக்கு ஆக்ஸிஜன் துண்டிக்கப்பட்டால் 4 முதல் 6 நிமிடங்கள் வரை அது உயிர்வாழும், அதன் பிறகு அது இறக்கத் தொடங்கும். அதன் பிறகு மீட்கப்பட்டால் கூட அதன் பல பாகங்கள் சிதைந்திருக்கும். 


📌 ஒருவரால் ஒருபோதும் அவரையே கூச்சப்படுத்திக்கொள்ள முடியாது.


மற்றவர்கள் நம் உடலை தொடுவதையும் நம்மை நாமே தொடுவதையும் மூளையால் வேறுபடுத்தி அறிந்துகொள்ள முடியும். 


📌 மூளை சுயமாக தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் வல்லமை கொண்டது. மனித மூளையின் ஒரு பகுதிக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட்டால் மூளையின் பாதுகாப்பான பகுதி பாதிக்கப்பட்ட பகுதியின் செயற்பாடுகளை சுமந்து கொள்ளும்.


🧠 இப்போதாவது உங்கள் தலைக்குள்


விலைமதிக்க முடியாத ஒரு பொக்கிஷம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா!!!


வான்மறை வசனம் ஒன்று நம்மைப் பார்த்து இப்படிக் கேற்கிறது:


((உங்களுக்குள்ளேயே (பல சான்றுகள் உள்ளன) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?))


📖 அல்குர்ஆன் : 51:21


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.