கத்தாரின் பொறுப்பாளர்களுக்கு, இலங்கையின் பாராட்டுக்கள் தெரிவிப்பு
ரபா எல்லையைத் திறப்பதில் கத்தார் அரசு மேற்கொண்ட வெற்றிகரமான மத்தியஸ்தத்திற்காக, கத்தாரின் பொறுப்பாளர்களுக்கு இலங்கையின் பாராட்டுகளைத் தெரிவிப்பதுடன், சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் இணைந்து முயற்சிகளை ஒருங்கிணைத்ததில் வெளிவிவகார அமைச்சு மகிழ்ச்சி அடைகின்றமை சிறப்பம்சமாகும்.
இதே வேளை, இதனூடாக 11 இலங்கையர்கள் உட்பட நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பிரஜைகள் பயனடைந்துள்ளனர்.
மேலும், கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் முயற்சியால் 11 இலங்கையர்களும் தற்போது நாட்டிற்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு

Post a Comment