Header Ads



கொலையில் முடிந்த ரகசிய காதல்


இருவருக்கு இடையேயான ரகசியக் காதலை பலர் மத்தியில் குடிபோதையில் வெளிப்படுத்தியதற்காக ஒருவர் மற்றொருவரை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார்.


உயிரிழந்தவரும் சந்தேகநபரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போதே, உயிரிழந்தவர் ரகசியக் காதலை வெளிப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.


களுத்துறை வடக்கு, மஹா வஸ்கடுவ கந்த பன்சல வீதியில் வசித்து வந்த 67 வயதான ரமோன் ஜயதிஸ்ஸ என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கட்டையையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.