இலங்கையில் உள்ள மேற்கத்திய முகவர், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் குறித்து விழிப்பாக இருங்கள்
காசாவின் அப்பாவி மக்களுக்கு எதிராக, இஸ்ரேல் புரியும் அக்கிரமங்களை உலகிற்கு அம்பலப்படுத்திய 46 ஊடகவியலாளர்கள் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு ரஹ்மத் செய்யட்டும். அவர்களினதும், அவர்களுடைய குடும்பங்களுக்காகவும் நாம் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.
அதேவேளை இலங்கையில் உள்ள சில முஸ்லிம் ஊடகவியலாளர்கள், மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அடிமைப்பட்டு, காசாவில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தோ, இஸ்ரேலின் கொடூரங்கள் பற்றியோ ஒரு வார்த்தைதானும் தமது முகநூலிலோ, தமது இணையத்திலோ எழுதவில்லை.
ஆகக்குறைந்தது தமது ஊர்களில் நடந்த, காசா ஆதரவு போராட்டங்களைக்கூட பதிவேற்ற முன்வரவில்லை என்பது கவலைக்குரியது. மேற்கு நாடுகளின் இந்த முகவர்கள் குறித்து, விழிப்பாக இருப்போம். நமது சமூகத்திற்கெதிரான சகல சதித் திட்டங்களில் இருந்தும், இறைவன் எமது சமூகத்தை பாதுகாக்கட்டும்.

Post a Comment