Header Ads



லிட்ரோ புதிய விலைப்பட்டியல் வெளியானது


இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.


அதன்படி,


12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.


இதன்படி 12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,565 ஆகும்.


மேலும், 5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 1,431 ஆகும்.


மேலும், 2.3 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 688 ஆகும்.


உலகச் சந்தையில் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.