Header Ads



ரணில் குறித்து வெளியான தகவல்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இனிமேல் எவராலும் வீழ்த்த முடியாது, சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியினரின் பொய் பித்தலாட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது என பொது நிர்வாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.


உற்பத்திகளை அதிகரித்தல் மற்றும் பொருட்களின் விலைகளைக் குறைப்பதன் ஊடாக நாட்டு மக்களுக்கு சுமூகமான சூழலொன்றை உருவாக்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பள அதிகரிப்பால் மாத்திரம் அதற்குத் தீர்வு காண முடியாது என்றும், அடுத்த வருடத்தின் முதற்காலாண்டில் சுமூகமான நிலைமை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.