சீனாவில் இடம்பெற்ற சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டி - இலங்கை மாணவன் எம்.ஆர்.எம்.பஹீஜ் அல் பராஹ் முதலிடம்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
சீனாவில் இடம்பெற்ற சர்வதேச விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி உயர்தர உயிரியல் மாணவன் எம்.ஆர்.எம்.பஹீஜ் அல் பராஹ் குழு ரீதியிலான ஆய்வில் (7th belt and Road Teenage maker camp) முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
இச் சாதனை மாணவனை கிண்ணியா வலய கல்விப் பணிப்பாளர் பெற்றோருடன் பணிமனைக்கு வரவழைத்து பாராட்டி கெளரவித்துள்ளார்.
இந்நிகழ்வில் சாதனை மாணவன், பெற்றோர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கல்விப் பணிமனை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment