Header Ads



ஒரு கிலோ சீனி மாத்திரமே வழங்கப்படும்


வெள்ளை சீனி கிலோ கிராம் ரூ.275 வுக்கு தொடர்ந்து விற்பனை செய்யவுள்ளதாக லங்கா சதொச முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இதன்படி வாடிக்கையாளர் ஒருவருக்கு தலா ரூ. 275வில் ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி மாத்திரமே வழங்கப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.


சிவப்பு சீனி (brown sugar) கிலோ ஒன்று ரூ.330வாக விற்பனை செய்யப்படுவதுடன், வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்படும் சீனியின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இதேவேளை,சில லங்கா சதொச கடைகளில் வெள்ளை சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.