Header Ads



ஜே.வி.பி. க்கு பணம் கொடுத்த கிரிக்கெட் சபைத் தலைவர் - பாராளுமன்றத்தில் கூறப்பட்ட விடயம்


கிரிக்கெட் சபைத் தலைவர் ஷம்மித சில்வா ஜே.வி.பி நிதிக்கு பணம் கொடுத்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது என அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.  

 

ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரசபையின் தலைவர் உட்பட நிர்வாகசபை தலைவர் உட்பட நிர்வாக சபைையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பைப்பொன்றை சட்டம் மூலம் அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில்   வியாழக்கிழமை  (09) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 


   இப்போது நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. கிரிக்கட் சபை இராஜினாமா செய்யாது. அதை எங்களால் அகற்ற முடியாது. எனவே இந்த சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற பிரேரணையை  ஜனாதிபதி கொண்டு வந்தார்.  


 இந்த கிரிக்கெட் நிர்வாக சபை ஒரு மோசடி கூடாரம் என்பது நம் அனைவரின் கருத்து. எனவே இதை அகற்ற வேண்டும். ஒவ்வொருவருடைய அரசியல் இலக்குகளை அடைய முயலாமல் முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாக இருக்க நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.


  ஜே.வி.பி.க்கு கிரிக்கெட் நிதியில் இருந்து பணம் வழங்கப்பட்டதாக எழுந்த சந்தேகம் மேலும் உறுதியாகியுள்ளது. கிரிக்கட்சபைத் தலைவர் ஷம்மித சில்வா, ஜே.வி.பி நிதிக்கு பணம் கொடுத்துள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் என்னால் நிரூபிக்க முடியாது என்றார்.   

No comments

Powered by Blogger.