Header Ads



பெற்றோருடன் சுற்றுலா சென்றிருந்த குழந்தை நீச்சல் தடாகத்தில் சடலமாக மீட்பு


காலி - பெந்தோட்டை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தமது பெற்றோருடன் சுற்றுலா சென்றிருந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


தமது விடுதி அறையில் குழந்தை இல்லாதிருப்பதை அவதானித்த பெற்றோர், தேடிய போது, குழந்தை நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டது.


உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் கொழும்பு - தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.