Header Ads



பயணப் பையில் துப்பாக்கி


கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த வெளிநாட்டவரினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.


துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 58 வயதுடைய மாலைதீவு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


விமான நிலையத்தின் ஓய்வறையில் வைத்து நேற்று சனிக்கிழமை (11) இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


விமான நிலைய அதிகாரிகள் இவருடைய பயணப் பையை சோதனை செய்த போது துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.