மீண்டும் 100 கோடி ரூபா சீனி, வரி மோசடியில் அரசாங்கம்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் 44 ஆவது கட்டமாக மெதிரிகிரிய லங்காபுர மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (5) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்த சீனி மாபியாவில் அங்கம் வகிக்கும் கூட்டாளிகளை பாதுகாக்க அரசாங்கம் செயல்பட்டுள்ளதாகவும்,இதுபோன்ற மோசடிகளுக்கு இடமளித்திருப்பது எதிர்காலத் தேர்தல்களில் ஆதாயம் அடையவா என்ற சந்தேகம் எழுவதாகவும்,இந்த வரி மோசடியில் அரசாங்கம் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும்,இது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு மீண்டும் வரி விதிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩அமைச்சரவையை மாற்றுவது போல் கிரிக்கெட் நிர்வாகத்தை மாற்ற முடியாது.
இன்று கிரிக்கெட் விளையாட்டு சக்தி வாய்ந்தவர்களின் ஆடுகளமாக மாறி,பணம், கப்பம்,அரசியல் மயமாக்கல் போன்றவற்றின் மூலம் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதால் அது வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்,
இதற்கு தற்காலிக தீர்வுகள் தேவையில்லை என்றும்,நிலையான நீண்ட கால தீர்வுகள் தேவை என்றும்,ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பிழைப்புக்காக அமைச்சரவையை பொய்யாக மாற்றுவது போன்ற பொய்யான சூழ்ச்சிகளால் கிரிகெட் நிறுவனத்தில் அங்கத்தவர்களை மாற்றி கிரிக்கெட்டை காப்பாற்ற முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த திருத்தங்கள் உண்மையாகவும், யதார்த்தமாகவும்,நடைமுறை ரீதியாகவும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும்,எந்த ஒரு அரசியல்வாதியும் எந்த விளையாட்டு சங்கத்திலும் பதவிகளை வகிக்க அனுமதிக்கக் கூடாது என்றும்,தொழில்முறை விளையாட்டுகளில் ஈடுபட்டு வென்ற வீரர்களுக்கு விளையாட்டுத் துறை நிர்வாகம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், இவ்வேளையில்,
இவ்வாறான வீரர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு,முதலாளிகளின் அரசியல் பலத்தினாலும்,சதி பலத்தினாலும் விளையாட்டானது பாழாகியுள்ள நிலையில்,தற்காலிக தீர்வில்லாத நிரந்தரத் தீர்வே தேவையாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அரசாங்கம் பல விடயங்களில் தவறான செயல்களை செய்து வருகிறது என்றும், கிரிக்கெட்டை அழித்த சக்திகளைக் கூட பாதுகாப்பதற்காக அரசாங்கத்தின் குறிப்பிட்ட தரப்புகள் செயற்பட்டு வருகின்றன என்றும், ஊழல் காரணமாகவே சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியால் இந்த ஆண்டு உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியாது போனதாகவும்,நமது நாடும் இவ்வாறானதொரு நிலைக்கு சென்று விடக்கூடாது என்றும்,இதற்கு இனம்,மதம், சாதி,வர்க்கம்,கட்சி வேறுபாடின்றி தகுதியானவர்கள்,திறமையானவர்கள் கிரிக்கெட் நிர்வாகத்தில் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
🟩பிரபஞ்சம் நிகழ்ச்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் நாசகார சக்திகள்
பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டம் எங்கு செயல்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் மின்சாரத்தை துண்டிக்கும் சதித் திட்டமொன்று அண்மைய நாட்களாக நடந்து வருவதாகவும்,மாணவ மாணவியர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டங்களுக்கு இடையூறு செய்து வருவது வருத்தமளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.பிரபஞ்சம் பஸ் திட்டத்தின் கீழ் 80 அரச பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 389,200,000.00 ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது.
பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் 44 அரச பாடசாலைகளுக்கு 404 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Post a Comment