எங்களுக்கு ஒரேயொரு பணி உள்ளது, அதனை முடிக்கும் வரை நாங்கள் நிறுத்தமாட்டோம்
காசா மீது தரை வழி படையெடுப்பை மேற்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தலைவரான லெப்டினென்ட் ஜெனரல் ஹெர்ஜி ஹாலேவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“நான் தெளிவாக ஒன்றை கூற விரும்புகிறேன். படையெடுப்பை மேற்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஒவ்வொரு நிமிடம் கடந்து போனாலும், எதிரிகளை நாங்கள் இன்னும் கூடுதலாகவே தாக்குவோம்.
அவர்களுடைய தளபதிகளை நாங்கள் கொல்வோம். அவர்களின் உட்கட்டமைப்புகளை தாக்கி அழிப்போம்.
அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான உளவு தகவல்களை இன்னும் அதிகம் சேகரிப்போம்” என்றார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கருத்து தெரிவிக்கும்போது, களத்தில் ஹமாஸ் க்கு எதிராக எங்களுக்கு ஒரேயொரு பணி உள்ளது.
அது அவர்களை அழிப்பது. அந்த பணியை முடிக்கும் வரை நாங்கள் நிறுத்தமாட்டோம்” என்று குறிப்பிட்டார்.

நீ உன்னுடைய பணியை முடியும் வரை குழந்தைகளை, தாய்மார்களை பெண்பிள்ளைகளைக் கொலை செய்து கொண்டே இரு, மனமுடைந்து கவலையில் நிலைகலங்கி, கண்ணீர் விட்டு அல்லாஹ்விடம் கேட்கும் எமது துஆவும் உனக்கும் அக்கிரமக்கார கொலைகாரன்களுக்கும் எதிரான எங்கள் பிரார்த்தனையும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
ReplyDelete