Header Ads



பலவந்தமாக ஜனாதிபதி பதவியை ரணில் பெறவில்லை, வெற்றிலை வைத்து எவரிடமும் கையேந்தவும் இல்லை


ரணில் விக்ரமசிங்க வலிந்து சென்று மொட்டுக் கட்சியிடம் எந்தவொரு பதவியையும் கேட்கவில்லை, அக்கட்சியினரே பதவிகளை ஏற்குமாறு கோரினர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.


எனவே, நாடா அமைச்சுப் பதவியா என்பது குறித்து அக்கட்சியே முடிவெடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.


சுகாதார அமைச்சுப் பதவியில் இருந்து கெஹலிய ரம்புக்வெல நீக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் மொட்டுக் கட்சி அதிருப்தியை வெளியிட்டுள்ளது.


அத்துடன், மொட்டுக் கட்சிக்குரிய அமைச்சுப் பதவியை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய ஜனாதிபதியின் முடிவு தவறு என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.


இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பாலித ரங்கே பண்டார,


ஜனாதிபதி பதவியை ரணில் விக்ரமசிங்க பலவந்தமாகப் பெறவில்லை. வெற்றிவை வைத்து எவரிடமும் அவர் கையேந்தவும் இல்லை.


மொட்டுக் கட்சியினர் தாமாக அழைத்தே எமது ஜனாதிபதிக்குப் பதவிகளை வழங்கினர். ஆகவே நாடா, அமைச்சுப் பதவியா என்பது குறித்து அக்கட்சியினரே முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. சாடகையில் தொங்கும் ரணில் சாடக அறுந்துவிட்டால் விழுவது பாதாளக்குழியில். அதற்கு முன்னர் பொதுத்தேர்தல் தினத்தை அறிவித்துவிட்டு தியவன்னாவையைக் கலைத்துவிட்டால் மந்திகளுக்கு ஓடக்காடு இல்லை.அப்போது இந்த நாட்டு மக்களின் மனோநிலையைச் சரியாக மதிப்பீடு செய்யலாம்.

    ReplyDelete

Powered by Blogger.