Header Ads



அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன பொன்விழா நிகழ்வும், 50 ஆவது வருடாந்த மாநாடும்


அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் பொன்விழா நிகழ்வும் 50 ஆவது வருடாந்த மாநாடும் 2023 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 29 ஆம் திகதி(ஞாயிறு) நடைபெறவுள்ளமையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.


ஒற்றுமை,சேவை மற்றும் அபிவிருத்தியை மகுட வாசகமாக கொண்டு ஐந்து தசாப்தாங்களாக முன்னெடுத்த பல்வேறு சாதனைகளை கொண்டாடுவதற்கும் சம்மேளனத்தின் வரலாற்று நிகழ்வாக அமையவிருக்கும் இதில் இலங்கையின் பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை,சகிப்புத்தன்மை மற்றும் கலாச்சார புரிந்துணர்வை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் இந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமையும். 


பொன் விழா மற்றும் 50 ஆவது வருடாந்த மாநாட்டிற்கு பிரதம அதிதியாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.


இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொள்வதோடு விசேட அதிதிகளாக இந்திய நாடாளுமன்றத்தின் (லோக்சபா) முன்னாள் உறுப்பினரும் இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவருமான கௌரவ பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் மற்றும் தமிழ் நாடு,இராமநாதபுரம் தொகுதி இந்திய நாடாளுமன்ற (லோக்சபா) உறுப்பினர் கே.நவாஸ் கனி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


பொன்விழா மற்றும் 50 ஆவது வருடாந்த மாநாட்டு சிறப்புரையினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,ஈரானிய இஸ்லாமிய குடியரசுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் நிகழ்த்துவார்.


தேசிய மற்றும் சர்வதேச அளவில் மாநாட்டின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில், இராஜதந்திரிகள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள்.


மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களின் உரைகள்,பொன்விழா முத்திரை வெளியீடு, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளம் தலைவர்களின் ஆய்வு முன்வைப்புகள், நமது தேசம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்கள்,கலை கலாசார அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இதில் இடம்பெறும். 


ஊடகங்களின் பிரசன்னம் பல்வேறு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வின் தூதை எமது சம்மேளன நோக்கத்தை மையமாக கொண்டு செல்ல உதவும் என்பது எங்கள் நம்பிக்கையாகும்.


பிரமுகர்களுடான குறுகிய நேர்காணல்கள், செய்தி காணொளிகள்,காணொளிகள் மற்றும் நிகழ்வுத் தகவல்கள் வசதிகளை தேவைக்கேற்ப ஏற்படுத்திக்கொடுப்பதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


ஐக்கியமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் அர்ப்பணிப்புக்கு சான்றாக அமையும் இந்த வரலாற்று நிகழ்வில் உங்கள் பங்கேற்பையும், அறிக்கையிடலையும் மரியாதை கொண்டு எதிர்பார்க்கிறோம்.


நிகழ்வு விபரங்கள்:

திகதி: 2023 ஒக்டோபர் 29 (ஞாயிறு)

நேரம்:காலை 9:00 மணி முதல்

இடம்:விளையாட்டுத்துறை அமைச்சு கேட்போர் கூடம்.கொழும்பு 7


மேலதிக தகவல் அல்லது உங்கள் ஊடக அறிக்கையிடல் சார்ந்த ஒருங்கிணைப்புகளுக்கு தயவு சகோதரர் இஸட்.எப்.அஹமட் பர்ஹான் அவர்களை (071-6337279) தொடர்பு கொள்ளுமாறு தயவாய் வேண்டிக்கொள்கிறோம்.

No comments

Powered by Blogger.