இலங்கைக்கு நன்கொடை வழங்கவுள்ள பங்களாதேஷ்
பங்களாதேஷ் பிரதியமைச்சர் ஊடாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பங்களாதேஷ் பிரதமரிடம் நன்கொடை வழங்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மேலும், பங்களாதேசின் சுகாதார அமைச்சின் பங்களிப்புடன் 58,307 அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் இந்த வாரத்திற்குள் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
புற்றுநோய் மற்றும் சிறுநீரக சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளை பங்களாதேஷ் நன்கொடையாக வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தனது நன்றியைத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இலங்கைக்கு உடனடி உதவிகளை வழங்கிய பங்களாதேஷ் பிரதமர், சுகாதார அமைச்சர் மற்றும் அரசாங்கத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வாக பங்களாதேஷ் அரசுடன் மருத்துவப் பொருட்கள் தொடர்பான நீண்டகால புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவும் சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

பொய்யையும் புரட்டையும் நடிப்பையும் பம்போரி அடிக்கும் இந்த கெசெலியவும் அவருடைய அரசாங்கமும் உயிர்ப்பிச்சை கேட்கவும் உலகில் எஞ்சியிருப்பது பங்களாதேஷ் மட்டும்தான். மற்றநாடுகளுக்கு சவாரி செய்து பொதுமக்களின் பணத்தைச் சுரண்டி அதில் இன்பம் காணுவதும் தான் இவன்களுக்கு எஞ்சியிருக்கின்றது.
ReplyDelete