கனடா பிரதமரை குற்றம் சுமத்தும் அலி சப்ரி - இந்தியாவுக்கு ஆதரவாக கருத்துரைப்பு
இந்தியா மற்றும் கனடாவிற்கிடையில் நிலவும் பதற்ற நிலை குறித்து இந்திய ஊடகமான ANI க்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உறுதியான ஆதாரங்கள் இன்றி இந்தியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமைக்காக கனடா பிரதமரை அலி சப்ரி கடுமையாக சாடியுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரமற்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால் அவரது தற்போதைய கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
சில பயங்கரவாதிகள் கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ள அலி சப்ரி, ஆதாரங்கள் அற்ற கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சுபாவம் கனடா பிரதமருக்குள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்திலும் கனடா பிரதமர் அவ்வாறு தான் நடந்து கொண்டார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக பெரும் பொய்யை சொன்னார் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளது என்ற கனட பிரதமரின் குற்றச்சாட்டினால் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை உருவாகியுள்ள நிலையிலேயே இலங்கை வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Canada is an asylum for terrorists is an utterence by a foreign minister of a country means which invariably affect the status of this country, under any circumstances, a foreign minister should make this type of very serious and offensive utterence by a minister represents Sri Lanka, as we are made to be called as an international begger by our politicians whether we like it or not. This so called foreign Minister does not have a background or basic knowledge in diplomacy. Tomorrow or day after this Sabri will deny to the effect that he did not utter anything against Canada as he hails from Rajapaksha family. But his this type of non-sense utterence would definitey affect our country 's image an status with a bad repercutions to those who apply for Canada visa for various purposes.
ReplyDelete