அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது
அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையிலான கூட்டணி முறிந்துவிட்டதாக இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு, அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
கூட்டணியாக இருந்த பாரதீய ஜனதா கட்சிக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டிருந்த நிலையில், அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று -25- அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 69 மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பலரும் பா.ஜ.கவுடனான கூட்டணி தேவையில்லை என்பதையே வலியுறுத்திவந்தனர்.
இதற்குப் பிறகு, பா.ஜ.கவுடனான கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment