பொதுஜன பெரமுன குறித்து, மைத்திரிபால கடும் விமர்சனம்
கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் எமக்கு எந்த சவாலும் இல்லை. அவர்கள் காட்டில் ஒழிந்திருந்து விட்டு வெளியில் வந்துள்ளனர்.
நான்கு மாதங்கள் நடைபெற்ற போராட்டத்தின் பின்னர், ஜனாதிபதி பதவி விலகினார். பிரதமர் உட்பட அமைச்சரவையும் பதவி விலகியது. அந்த கட்சியை சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு சென்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தற்போது நாட்டில் மக்கள் ஆதரவு இல்லை. எனினும் அவர்கள் கூட்டங்களை நடத்தி, துண்டுப்பிரசுரங்களையும் விண்ணப்பங்களையும் விநியோகித்து, மக்கள் ஆதரவை கட்டியெழுப்ப கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றன.
பொலன்நறுவையில் அப்படியான கூட்டம் ஒன்று நடந்தது, எனினும் மக்கள் அந்த கூட்டத்தில் விருப்பத்துடன் கலந்துக்கொள்ளவில்லை.
அத்துடன் பொதுஜன பெரமுன என்பது ஒரு கட்சியல்ல. அதற்கு அதிகாரிகள் இல்லை என்பதுடன் கொள்கையோ நோக்கோ இல்லை.
பொதுஜன பெரமுனவின் யாப்பு என்ன என்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment