பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு - தாயின் கதறல்
சம்பவத்தில் , மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய M. திலக்ஸன் எனவும் மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
அவருடன் மேலும் ஐந்து மாணவர்கள் நீச்சல் தடாகத்தில் இறங்கும்போதே குறித்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஏனைய மாணவர்கள் அவரை மீட்டு முதலுதவிகளை வழங்கி பல்கலைக்கழக அம்பியூலன்ஸ் மூலம் மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை நண்பர்களுடன் நீராட சென்றபோதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்ற போதிலும் தன்னுடைய மகன் புலமைபரிசில் மூலம் பல்கலைகழகம் சென்றதாக குறிப்பிட்டுள்ளதுடன் கால்பந்து விளையாட்டிலும் இம்முறை தேர்வாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு புனிதமிக்கல் கல்லுரியின் கல்வி பயின்று ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். படிப்பே குறிக்கோளாக கொண்டு இருந்த தனது மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக தாயார் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் அனுராதபுற வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சடலத்தினை மட்டக்களப்புக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Post a Comment