Header Ads



வியப்பூட்டும் இந்தப் பறவையின் இடம்பெயர்வு


சதாக் குயில் என்ற, குயில் குடும்பத்தை சேர்ந்த வியப்பூட்டும் இந்தப் பறவையின் இடம்பெயர்வுப் பாதைவழியை செயற்கைக்கோளின் துணையுடன் ஆய்வாளர்களால் கண்காணிக்க முடிந்துள்ளது. 


அத‌ன்படி இப்பறவையானது தென்னாப்பிரிக்காவிலிருந்து வட சீனாவில் அமைந்துள்ளது மங்கோலியா நாட்டிற்கு 16 நாடுகளை கடந்து ஏறத்தாழ 12,000 கிலோமீட்டர் தூரத்தை கடந்து சென்றுள்ளதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். 


விசித்திரமான இப்பயணத்தில் , இந்தப் பறவை இந்தியப் பெருங்கடலை  இடைவிடாது மணிக்கு 60 கிமீ வேகத்தில்  புயல்களையும், சவால்களையும், சந்தித்த வண்ணம் பயணித்துள்ளது. 


நமக்கு சிறிய தகைமைகளைக் கொண்ட ரிமோட் கண்ட்ரோல்டு விமானத்தை தயாரிக்க ஆயிரக்கணக்கான தொழிநுட்ப வல்லுநர்கள் தேவைப்பட அபார திறன்மிக்க உடலும் உயிரும் உள்ள இந்தப் பறவையின் உயிரியல் பலம் எப்படி இருக்கும் என்பது பற்றி சிந்தித்துப் பாருங்கள். 


இது இப்படியிருக்க டார்வினின் சீடர்கள் கிளம்பி வந்து, இப்பறவைகள் படைக்கப்பட்டவும் இல்லை, வடிவமைக்கப்படவும் இல்லை, மாறாக பூச்சிகளைப் பிடிக்க ஓடிச்சென்ற டைனோசர்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக ஓடியதன் விளைவாக படிப்படியாக பறந்து பரிணாமம் கண்டன, என்பதாக மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வந்துவிடுகின்றனர். 


((இறக்கைகளை விரித்துக்கொண்டும்    மடக்கிக்கொண்டும் அவர்களுக்கு மேல்   (ஆகாயத்தில் அணியணியாகப் பறக்கும்) பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அந்த ரஹ்மானையன்றி வேறு யாரும் அவைகளை பிடித்தியக்கவில்லை.))


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.