Header Adsஉலக வல்லரசுகளின் பங்குகளை பறிக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது, நாங்கள் தீவுகளில் முதலீடு செய்யவில்லை


இந்நாட்டிலுள்ள சில கட்சிகளைப் போல, ஐக்கிய மக்கள் சக்தி தீவுகளிலும், வணிகங்களிலும் அல்லது பிற இலாபகரமான முயற்சியாண்மைகளிலும் முதலீடு செய்யவில்லை என்றும், ஐக்கிய மக்கள் சக்தி நமது நாட்டின் குழந்தைகளுக்காக மூச்சு,பிரபஞ்சம் போன்ற திட்டங்கள் மூலம் நல்ல சுகாதார கட்டமைப்பை வழங்குவதற்காகவே முதலீடு செய்ததாகவும்,இந்த மூச்சு மற்றும் பிரபஞ்சம் திட்டங்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், 
மாறாக நாட்டின் பிள்ளைகளையும் சுகாதாரத் துறையையும் அபிவிருத்தி செய்வதன் மூலம் மக்களுக்கு ஆதரவளிப்பதற்காவே ஆரம்பிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


எதிர்க்கட்சி என்ற வகையில் இந்த செயற்பாடுகள் அனைத்தும் பட்டம் பதவியை அடைவதை எதிர்பார்த்து செய்யப்படுவதில்லை என்றும்,அரசாங்கம் மற்றும் அரசாங்க சார்பு ஊடகங்கள் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணையப்போவதாக போலியான செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், மக்களுக்குத் துரோகமிழைத்து ஒருபோதும் அதிகாரத்தைப் பெறத் தயாராக இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் மினுவாங்கொடை ரெஜி ரணதுங்க ஆரம்பப் பிரிவுப் பாடசாலைக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் வழங்கும் நிகழ்வில் இன்று (29) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.இந்த பஸ்ஸுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதுவரை மொத்தமாக 76 பஸ்களை அன்பளிப்புச் செய்துள்ளார்.


இன்று வெளியான பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும், சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்டு நாட்டின் பணத்தை வீணடிப்பதாக மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்,இச்செய்தியைக் கண்டு தாம் மகிழ்ச்சியடைந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.


தாகம்,பட்டினி,செய்கைகளுக்குத் தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்,பாடசாலை மாணவர்கள்,போதைப் பொருள் பிரச்சினைகள் குறித்தே நாடாளுமன்றத்தில் பேசுவதாகவும்,இவ்விடயங்களைப் பற்றி பேசும்போது சிலருக்கு அசௌகரியமாக இருப்பதாகவும்,இப்பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் அவதானத்தைத் திருப்பச் செய்து அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என்றே தாம் இவ்வாறு முன்வைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இவற்றைச் சுட்டிக்காட்டுவது நாடாளுமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதல்ல என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,கடந்த காலங்களில் எதிர்கட்சியினர் போன்று அரசாங்கத்திடம் இருந்து கொமிஸ்  தொகையை பெற்றுக்கொண்டு அரசாங்கத்தை தாக்காமல் டீல் அரசியலில் ஈடுபடாத காரணத்தினால் தான் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.


சமீபகாலமாக குடிநீர் பிரச்சினையில் சாதி, மத வேறுபாடின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும்,இதற்காக அரசாங்கத்திற்கு தன்னால் இயன்ற ஆதரவை வழங்குவதாக கூறிய போது சமூக வலைத்தளங்கள் ஊடாக சஜித்-ரணில் டீல் என போலியான செய்திகளை கட்டமைத்ததாகவும்,ரணிலுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்குப் பதிலாக,கோட்டாபய மற்றும் ராஜபக்ச குடும்பத்துடன் டீல் செய்து நேரடியாக ஜனாதிபதியாகும் வாய்ப்பு தனக்கு இருந்ததாகவும்,

இத்தகைய மக்கள் ஆணை இல்லாத பதவியை தான் ஏற்கவில்லை என்றும், மக்களின் ஆசியுடனும், மக்களின் நம்பிக்கையுடனும், மக்கள் ஆணையுடனுமே ஒரு நாள் இவ்வாறானதொரு பதவிக்கு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பதவியை எதிர்பார்த்து நாட்டுக்கு சேவை செய்யவில்லை என்றும்,இந்த பதவி சூதாட்டத்தில் இருந்து நம் நாடு விடுபட வேண்டும் என்றும்,ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாளிகைகளுக்குள் போடும் டீல் அரசியல் கலாசாரம் துடைத்தெறியப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தி இந்நேரத்தில் அரசாங்கத்திற்கு உதவுவது பதவிகளை எதிர்பார்த்து அல்ல என்றும்,எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவதையே நோக்கமாக கொண்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


2019 ஆம் ஆண்டைப் போன்றே நாட்டின் பல்வேறு தரப்பினருக்குச் சொந்தமான ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும்,உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த விட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் 136 பேர் இருக்க வேண்டும் என்றாலும்,தற்போது நமது நாட்டில் 76 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களே உள்ளனர் என்றும், மேலும் 15 பேர் சேவையில் இருந்து வெளியேறத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுவதாகவும்,

அவ்வாறு நடந்தால் பண்டாரநாயக்க விமான நிலையத்தை கூட மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும்,இதனை பாராளுமன்றத்தில் முன்வைத்து தீர்வை பெற்றுக்கொள்வது வீண் செலவு அல்ல என்றும்,இவை அனைத்தும் நேர்மையுடன் செய்யப்படுவதாகவும்,75 ஆண்டுகால அரசியல் கலாசாரத்தை தானும் தனது குழுவினரும் மாற்றியமைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.


பிரபஞ்சம்,மூச்சுத் திட்டங்கள் குறித்து அரசாங்கம் புத்திசாலித்தனமாக சிந்தித்தால்,அரசுக்கு இதனால் நிவாரணம் கிடைக்கும்,அது அரசாங்கத்திற்கு நன்மை பயக்கும் என்றும்,

அரசாங்கத்திற்கான பிரச்சினைகளை குறைக்கும் என்றும்,பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை மேம்படுத்தும் நோக்கிலேயே அன்றி,அரசாங்கத்தை இலகுவாக்கும் நோக்கில் அல்ல என்றும் என்றும் அவர் தெரிவித்தார்.


நிதி வங்குரோத்து நிலைக்கும் மேலாக,இன்று உலக வல்லரசுகளின் பங்குகளை பறிக்கும் நாடாக நம் நாடு மாறிவிட்டதாகவும்,அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் எமது நாடு ஏல நிலமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இன்றைய அரசியலின் பாரம்பரிய கலாசாரத்தின் பிரகாரம் தடை செய்யப்பட்ட வார்த்தையாக இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் காலாவதியான கட்டமைப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட்ட மஜர அரசியல் கலாசாரத்தைப் பின்பற்றுபவர் அல்லர் என்றும்,தம்மிடம் எத்தனை வாதப் பிரதிவாதங்கள் இருந்தாலும் ரெஜி ரணதுங்க ஆரம்ப பாடசாலையை நிர்மாணிப்பதற்காக அப்போதைய முதலமைச்சராக பிரசன்ன ரணதுங்க ஆற்றிய பணிகளை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.


மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்களும்,பிரபஞ்சம் பஸ் வழங்கும் திட்டத்தின் கீழ் 76 பாடசாலைகளுக்கு தலா 50 இலட்சம் ரூபாவில் பஸ்களை வழங்க 369,200,000.00 ரூபாவும்,பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் 33 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்க 29,033,650.00 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.