Header Ads



அண்ணாந்து தியானிக்க வைக்கும் ஒரு படம்..!


விந்தணு ஒன்று கருமுட்டையின் கதவைத் தட்டி, உள்ளே ஊடுருவ முயற்சிக்கும் அருமையான இக்காட்சியை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் லெனார்ட் நில்சன் 12 வருட கால முயற்சிக்குப் பின்னர் படம் பிடித்துள்ளார்.


கண், காது, உடல், உயிர் மற்றும் புத்தியறிவோடு நடமாடித் திரியும் அபார ஆற்றல்கள் கொண்ட இந்த மனிதனா இப்படியொரு காட்சியில் ஒரு நாள் இருந்தான்!


பூமியின் மேற்பரப்பில் மலைகளைக் குடைந்து, கோபுரங்களையும், மாடம் மாளிகைகளையும் மகத்தான சாதனைகளை சாதித்த பழங்கால, மற்றும் நவகால மனிதனா ஒரு நாள் புழுவை விட நூற்றுக்கணக்கான மடங்கு சிறிய வடிவமாக இருந்தான்!


வெற்றுக் கண்ணால் கூட பார்க்க முடியாத  இந்த நுண்ணுயிர்தானா ஹிட்லராக, ஸ்டாலினாக, ஐன்ஸ்டீனாக, நியூட்டனாக,  மேலும் பூமியில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் 800 கோடி மக்களாக மாறியது!


அன்று தொட்டு இன்று வரை நானிலத்தில் புண்ணியங்கள் பல செய்த மகான்கள், விஞ்ஞானிகள், மேதைகள், மற்றும் சாதனையாளர்களா ஒரு நாள் இப்படி ஒரு காட்சியில் காணப்படார்கள்!


அன்று தொட்டு இன்று வரை இந்த நிலமெலல்லாம் அநியாங்களாலும் அட்டகாசங்களாலும் நிரப்பிய கொடுங்ககோலர்களும், கொடியவர்களுமா இப்படி ஒரு காட்சியில் காணப்பட்டார்கள்!


பின்வரும் வான்மறை வசனங்களையும் படித்துப் பாருங்கள்!


((நிச்சயமாக நாம் மனிதனை களிமண்ணின் சத்தினால் படைத்தோம்.))


((பின்னர் நாம் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக வைத்தோம். ))


((பின்னர் நாம் அந்த விந்துத் துளியை (அட்டை போன்ற)  சினைமுட்டையாக ஆகினோம்; பின்னர் அந்த சினைமுட்டயை சதைப்பிண்டமாக்கினோம்; பின்னர் அத்த சதைப்பிண்டத்தை எலும்புகளாக ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு சதைகளை அணிவித்தோம்; பின்னர் நாம் அவனை வேறு ஒரு புதுப் படைப்பாக ஆக்கினோம்.))


இத்தகைய அழகிய படைப்பாளனான அல்லாஹ் மகத்தான பாக்கியவானாவான்))


📖 அல்குர்ஆன் : 23 /12 - 13 - 14 

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.