Header Ads



முட்டையின் விலையில் வீழ்ச்சி


களுத்துறை மாவட்டத்தில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் 35 ரூபாயாக முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனையடுத்து, சாதாரண கடைகளிலும் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.


தற்போது, உள்ளூர் சந்தையில் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் விலையும் 35 ரூபாய் வரை குறைந்துள்ளது.


இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் நாளாந்தம் சுமார் ஒரு இலட்சம் முட்டைகள் வரை, 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 comment:

  1. சதோசயில் முட்டை என்ற பெயரில் விற்கப்படுவது தொழில்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட இரசாயனக் கலவை. இதை பணம் கொடுத்து வாங்கி சாப்பிட்டால் இந்திய புற்றுநோய்தான் பரவும் என அனைவரும் கதைத்துக் கொள்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.