Header Ads



தயாசிறியின் வேதனை


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னை நீக்குவதற்கு ஒரு குழுவினர் முயற்சித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


மேலும் கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர,


“முன்னாள் ஜனாதிபதி என்னை வைத்திருக்க விரும்பவில்லை என்றால்.. நிறைவேற்று சபை என்னை விரும்பவில்லை என்றால், நான் வெளியேற தயார், என்னை நீக்க மேல்மட்டத்தில் உள்ளவர்களே முயற்சி. அதற்கு நான் பயப்படவில்லை. என்னால் பெயர்களை குறிப்பிட முடியாது. அவர்கள் இதை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்க விரும்புகிறார்கள்." என்றார்.

No comments

Powered by Blogger.