பெருந்தொகை தமிழர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டார்கள் - வட மாகாணம் தமிழர்களுடையது எனக்கூறும் நிலை மாறிவிடும்
யாழ்ப்பாண பல்லைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில், ஐந்து வருடங்கள் சென்றால் வடக்கு மாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக்கூறும் நிலை மாறிவிடும் என யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் திருகோணமலையில் பெருந்தொகையான தமிழர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டார்கள். ஏனெனில் தமிழர்களை கவனிப்பார்கள் இல்லை.
அவர்களை கவனிப்பதற்கு அதிகாரமும் இல்லை. எமக்கான அதிகாரங்களை பெற்றுக் கொண்டால் நிலங்களையும், கடல் வளங்களையும் பயன்படுத்தி பொருளாரத்தில் பலமடைய முடிவதோடு தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்கிக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார். Twin

இப்படி பச்சை இனவாதம் பேசும் இந்த பொறுக்கியெல்லாம் பேராசிரியரா?
ReplyDelete