Header Ads



சுவீடனில் அல்குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிராக பேசும் ரணில், திகனயில் குர்ஆனை எரித்து சிறுநீர் கழித்தபோது எங்கிருந்தார்..?


- Ismathul Rahuman -


சுவீடனில்  குர் ஆனை எரித்தது தொடர்பாக ரணில் தற்போது பேசுகிறார். அவர் பதவியில் இருக்கும்போது திகணையில் பள்ளிவாசலை உடைக்கப்பட்டு அல் குர்ஆனை எரித்து சிறுநீர் கழித்த போது ஒரு சொல் பேசவில்லை என தேசிய மக்கள் சக்தி நிரைவேற்றுக் குழு உறுப்பினர் மெளலவி முனீர் முளப்பர் நீர்கொழும்பு மாநகர மண்டப மைதானத்தில் இடம்பெற்ற    நீர்கொழும்பு தொகுதி தேசிய மக்கள் சக்தி சம்மேளன கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.


    ஜேவிபி பிரதான செயலாளர் டில்வின் சில்வா தலைமையில் நடைபெற்ற இச் சம்மேளனத்தில் முனீர் முளப்பர் தொடர்ந்து உரையாற்றுகையில்,


நீர்கொழும்பு என்பது பெளத்த, கத்தோலிக்க, இந்து, முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழும் நகரம்.  நான்கு வருடங்களுக்கு முன் என்ன நிலமை ஏற்பட்டது. தமது தேர்தல் வெற்றிக்காக 2019 ஏப்ரல் 21 தாக்குதலை தமது தேர்தல் தொனிப்பொருளாக எடுத்துக்கொண்டு  "மஹ மொலகருவுக்கு" தண்டனை வழங்குவதே எமது முதல் காரியம் என மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்கள். தேர்தல் மேடைகளில் இவர்களின் பேச்சைக் கேட்ட போது மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோர்களை கூட்டில் அடைப்பார்களோ   என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டது.   இதற்காக 69 இலட்சம் மக்கள் ஒன்றுசேர்ந்து தலைவர் ஒருவரை நியமித்தார்கள். பதிலாக வருடங்கள் செல்ல தண்டனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அரசு அவர்கள் எம் பாதுகாவலர்கள் என்று அவர்களை பதவியில் அமர்த்தி பின்னால் செல்லும் நிலையே ஏற்பட்டுள்ளது.


     இன்று ரணில் முஸ்லிம்,தமிழ் சமூகம் தொடர்பாக கூடுதல் கரிசனை காட்டுகிறார்.      திகணயில் இனக்கலவரம் ஏற்பட்டு எமது மக்கள் அடிபடும் போது பிரதமர் பதவியை வைத்துக்கொண்டு அதனை தடுக்காமல் இருந்து விட்டு சுவீடனில் அல் குர்ஆன் எரிப்பதற்கு எதிராக பேசுகிறார். திகணயில் பள்ளிவாசல் உடைத்து அல் குர்ஆன் எரித்து அதில் சிறுநீர் கழித்தபோதும் ரணில் ஒரு சொல் பேசவில்லை.


    30-40 வருடங்களுக்கு முன் தெற்கிலிருந்து வடக்கிற்கு ஆட்களை அழைத்துச்சென்று பெறுமதியான புத்தகஙகள் இருந்த யாழ் வாசிகசாலையை தீீீீீீயிட்ட போதும் பேசாது சுவிடனில் நடப்பதைப் பற்றி பேசுகிறார். இது என்ன வெக்கம்கெட்ட செயல்.


     தமிழ் தலைவர்களுடன் பிரச்சிணையை தீர்பதற்கு பேசுகிறார். அவர் பிரச்சிணையை தீர்பவரல்ல. எப்போதும் பிரச்சிணைகளை அதிகரிப்பதுடன் அவற்றை சிக்கலாக்குபவர்.


  நிதி இராஜாக அமைச்சர் கூறுகிறார் வீழ்ந்த நாட்டை கட்டியெழுப்புவதாக இது விழுந்த நாடல்ல. வீழ்த்தப்பட்ட நாடு என்றார்.


No comments

Powered by Blogger.