Header Ads



தப்பிச் செல்லும் டயானா


இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துசெய்ய உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிபேராணையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று -25- உத்தரவிட்டுள்ளது.


குறித்த மனு தீர்ப்பானது மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரட்ன மற்றும் நீதியரசர் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாத்தினால் இன்று அறிவிக்கப்படவிருந்தது.


எனினும், தமது தீர்ப்பிலும், நீதியரசர் மரிக்காரின் தீர்ப்பிலும் மாறுபாடு காணப்படுவதாக தலைமை நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரட்ன தெரிவித்துள்ளார்.


இதற்கமைய, குறித்த மனுமீதான விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


பிரதிவாதியான டயனா கமகே பிரித்தானிய குடியுரிமையை பெற்றுள்ளதால் இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் அவர் பாராளுமன்ற உறுப்புரிமையை வகிப்பதற்கு தகுதியற்றவர் எனவும் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துசெய்து உத்தரவிடுமாறும் குறித்த நீதிபேராணை மனுவில் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.