சத்தா ரதன தேரருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது
பௌத்த மதகுரு ராஜாங்கனை சத்தா ரதன தேரருக்கு எதிரான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் கடந்த (29.05.2023) திகதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ராஜாங்கனை சத்திரதன தேரரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அநீதியையும் அநியாயத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத இவர் முற்றிலும் பிழையானவர் என தீர்மானித்துவிடமுடியாது. நிலைமைகளை விபரிக்கும் போது பிரயோகிக்கும் வார்த்தைகளும் வசனங்களும் மதம் கலாசாரத்துக்கு முரணாக அமையலாம். அவர் அவருடைய நடத்தையைச் சீர்செய்து கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம். அதனைச் சரியாக பிரயோசனப்படுத்திக் கொள்வார் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
ReplyDelete