Header Ads



மீண்டும் வருகிறார் மொயீன் அலி


டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து ஆல்-ரவுண்டர்(All Rounder) மொயீன் அலி, தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார்.


2014 முதல் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் தொடர்களில் விளையாடி வரும் மொயின் அலி, கடந்த 2021-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.


இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் மெக்கலமுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு மொயின் அலி, தனது முடிவை திரும்பப் பெறுவதாக தெரிவித்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


மேலும்,  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ்(Ashes) தொடரிலும் மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் மொயின் அலியின் வருகை இங்கிலாந்து அணிக்கு பலம் சேர்த்துள்ளது.

No comments

Powered by Blogger.