Header Ads



குவைத்தில் மரணித்த இலங்கைப் பெண், இவரின் உறவினர்களை உங்களுக்குத் தெரியுமா..?


குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கைத் தூதரகம் வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் யாராவது தொடர்பு கொள்ளுமாறு  கோரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது.


குலசிங்க ஆராச்சியைச் சேர்ந்த அனுலா பிரிதிமாலி பெரேரா என்ற 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இவரின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள நெருங்கிய உறவினரோ அல்லது அவருக்குத் தெரிந்தவர்களோ இருந்தால் விரைவில் தெரிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்தவர் இலக்கம் 438/1, நுகவத்தை வீதி, கிரிவத்துடுவ என்ற முகவரியில் வசிப்பதாக குடிவரவுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில்  மேற்படி புகைப்படத்தில் உள்ள பெண்ணை யாரேனும் அறிந்தால், அமைச்சின் தொலைபேசி இலக்கம்: 011 -238836/ 011 -7711163/ 011- 2323015, மின்னஞ்சல்: consular@mfa.gov.lk அல்லது தூதரகப் பிரிவு, வெளிவிவகார அமைச்சு, 2 ஆவது மாடி, செலிங்கோ கட்டிடம் கொழும்பு 01. வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்குமாறும்  தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.