Header Ads



கோட்டாபய தொடர்பாக முஜிபுர் ரஹ்மான் கோரியுள்ள தகவல்கள்


பொதுமக்கள் தகவல்களை அணுகிக் கொள்வதனை ஒழுங்குபடுத்தும் முகமாக 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் சட்டத்தின் 3(1) பிரிவின் கீழ் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களால் ஜனாதிபதி செயலகத்தில் இன்று(15) தகவல்கள் கோரப்பட்டன.


அதன் Scan செய்யப்பட்ட நகல் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளதோடு,

கோரிய பிரதான தகவல்கள் மாத்திரம் தமிழ் மொழியில் இணைக்கப்பட்டுள்ளது.


(அ) ​​(i) ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் பொதுமக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு

 13 - 07 - 2022 அன்று ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய பின்னர்,

அரசாங்கம் அவருக்கு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்கியுள்ளதா? 


(ii) அப்படியானால்,அந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் முகவரி? 


(iii) அந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் பராமரிப்புக்காக ஒரு மாதத்திற்கு அரசாங்கத்தால் எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது? 


(iv) கோட்டாபய ராஜபக்சவுக்காக உத்தியோகபூர்வ இல்லத்தை ஒதுக்கியதன் பின்னர் இதுவரை அரசாங்கம் மேற்கொண்ட செலவுகளின் மொத்த தொகை எவ்வளவு? 


(v) தற்போது அவருக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படாவிட்டால்,

எதிர்காலத்தில் அவருக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா? 


(ஆ) (i) அவர் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய பின்னர் அவரது அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணியாளர் பதவிகளின் எண்ணிக்கை யாது? 


(ii) மேற்படி ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கான மாதாந்தச் செலவு எவ்வளவு?


(இ) (i) அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை யாது?


(ii) அந்தப் பாதுகாப்புப் பணியாளர்கள் எந்தப் பாதுகாப்புத் துறையால் வழங்கப்பட்டுள்ளார்கள்?


(ஈ) (i) அவருக்கும் அவரது ஊழியர்களுக்கும் வழங்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை என்ன? 


(ii) அந்த வாகனங்களின் வகைக்கு ஏற்ப தனித்தனியாக குறிப்பிடவும்? 


(உ) (i) மேலே குறிப்பிட்டுள்ள வசதிகளுக்கு மேலதிகமாக அவர் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய பிறகு அரசாங்கத்தால் அவருக்கு வேறு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன?


(ii) அந்த வசதிகளை வழங்குவதற்காக அரசாங்கம் இதுவரை செலவிட்ட மொத்தத் தொகை எவ்வளவு?

No comments

Powered by Blogger.