யாழ்ப்பாணத்தில் தன்னினச் சேர்க்கையாளர்கள்
சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவும் LGBTQIA+ சமூகத்திற்கு எதிரான பாகுபாடுகளை வலியுறுத்தியும் சுயமரியாதை நடை யாழ்ப்பாணத்தில் இன்றைய (10) தினம் இடம்பெற்றது.
சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு ´யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் - 2023´ நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக, ´ இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள்´ என்பதை வலியுறுத்தும் முகமாகவும், LGBTIQA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாக கருதுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வாழ்வதற்கான உரிமைகளை மதிப்பதுடன் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்க்கையை நோக்கிய பயணத்தின் ஓர் அங்கமாக சுயமரியாதை நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இந்த நடைபவனி, யாழ். பேருந்து நிலையம் முன்னாலிருந்து இன்று (10) காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி, சத்திரச் சந்தியை நோக்கி பயணித்து, பண்ணை வீதியூடாக , பொது நூலகத்தை அடைந்து வைத்தியசாலை வீதி ஊடாக நகர்ந்து, ஆரிய குளத்துக்கு முன்பாக நிறைவடைந்தது.
-யாழ். நிருபர் பிரதீபன்-

Post a Comment