Header Ads



உள்ளூராட்சி தேர்தலின் வேட்பு மனு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்


உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.


மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தனவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.


குறித்த ஆலோசனை குழுவில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இது தொடர்பான யோசனையை முன்வைத்திருந்ததாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.


ஆலோசனைக் குழுவில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தமது இணக்கப்பாட்டை அறிவித்தனர்.


தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தேர்தல் தொடர்ந்தும் தாமதப்படுத்தப்படுவதால் உள்ளுராட்சி மன்றங்களின் எதிர்கால நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இதன் காரணமாக உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


எவ்வாறாயினும், இவ்வாறான பிரேரணையை சமர்ப்பிப்பது தொடர்பில் தமது அமைச்சோ அல்லது அரசாங்கமோ இதுவரை இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.


இது அமைச்சின் ஆலோசனைக் குழுவில் முன்வைக்கப்பட்ட யோசனை மாத்திரமே எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இலங்கைச் சட்டத்துக்கு முரணாக செயற்படுவதன் மூலம் பொதுமக்களை வழிகெடுக்க இந்த 225 மந்திகளும் ஒன்றுபடுவதானால் இந்த மந்திகள் 225ஐயும் உடனடியாக சீனாவின் குரங்கு பண்ணைக்கு எற்றுமதி செய்து மந்திகளாக அடைத்து வைப்பதைத் தவிர வேறு எடுக்க வேணடிய நடவடிக்கைள் எதுவும் தற்போதைக்கு இல்லை. இலங்கையன் மந்திக்கூடம் இது போல செயற்பாடுகளைத் தொடர்ந்தால் இந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் அழிவும் இழிவும் தான் எஞ்சியிருக்கும் கடந்த வாரம் நியூஸ் வீக் பத்திரிகை இலங்கையை International Mendicant என வர்ணித்தது. அதாவது எந்தவிதமான வெட்கம் , ரோஷம் இன்றி பகிரங்கமாக பிச்சை வாங்கி வயிறு வளர்க்கும் நாடு என இலங்கையை மிகவும் கேவலமாக வர்ணிக்க காரணியாக இருந்த இந்த 225 மந்திகளையும் உடனடியாக இல்லாமல் செய்யும் ஏற்பாடுகளைப் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.