Header Ads

"தாடி வைப்பது அடிப்படை மனித உரிமை, இதில் கிழக்குப் பல்கலைக்கழகம் தலையிட முடியாது"

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றப்ப‌ட்ட‌தை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிற‌து. 

இச்செய‌லான‌து இலங்கை தேசத்தில் இன்ன‌மும் தமிழ், சிங்கள இரு ப‌க்க‌ பேரினவாதம் நில‌வுவ‌தை காட்டுகிற‌து என‌வும் அக்க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

தாடி வைத்திருப்பதனால் பரீட்சை எழுத விடாமல் கிழக்குப் பல்கலைக் கழக நிருவாகத்தினால் முஹம்மட் நுஸைப் என்ற மாணவர் பரீட்சை அறையில் இருந்து விரட்டப்பட்டுள்ளார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் ( Faculty of Health care Science) இறுதியாண்டு படிக்கும் மாணவன் முஹம்மட் நுசைப் தனது மார்க்க நம்பிக்கையை, அடையாளத்தை சுதந்திரமாகப் பின்பற்ற விரும்பும் மாணவன். அதன் அடிப்படையில் அவர் தாடி வைத்திருக்கிறார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மேற் குறிப்பிட்ட பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சதானந்தன் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. ஜனூசா நமச்சிவாயம் ஆகிய இருவரும் இம்மாணவன் தாடி வைத்திருப்பதனைக் கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர்.

தாடி வைத்திருப்பதன் காரணமாக பல துஷ்பிரயோகங்களுக்கு குறிப்பிட்ட பீடாதிபதியினாலும் சிரேஷ்ட விரிவுரையாளரினாலும் மாணவன் நுஸைப் கடுமையாக சாடப்பட்டிருக்கின்றார் என்று ஊட‌க‌ செய்திக‌ள் சொல்கின்ற‌ன‌.

இம்மாணவர் விரிவுரைகளுக்கு சென்றிருந்தும் தாடிவைத்திருந்தமை காரணமாக பல சந்தர்ப்பங்களில் விரிவுரைகளில் உட்கார விடாமல் வெளியேற்றப்பட்டிருந்தார். இதனால் பரீட்சைக்கு தோற்றுவதற்கான போதிய வரவு இல்லை என்ற காரணத்தைக் காட்டி தான் பரீட்சை எழுத அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படலாம் என அம்மாணவர் அஞ்சுகிறார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றப்ப‌ட்ட‌தை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிற‌து. 

இச்செய‌லான‌து இலங்கை தேசத்தில் இன்ன‌மும் தமிழ், சிங்கள இரு ப‌க்க‌ பேரினவாதம் நில‌வுவ‌தை காட்டுகிற‌து என‌வும் அக்க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

தாடி வைத்திருப்பதனால் பரீட்சை எழுத விடாமல் கிழக்குப் பல்கலைக் கழக நிருவாகத்தினால் முஹம்மட் நுஸைப் என்ற மாணவர் பரீட்சை அறையில் இருந்து விரட்டப்பட்டுள்ளார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் ( Faculty of Health care Science) இறுதியாண்டு படிக்கும் மாணவன் முஹம்மட் நுசைப் தனது மார்க்க நம்பிக்கையை, அடையாளத்தை சுதந்திரமாகப் பின்பற்ற விரும்பும் மாணவன்.அதன் அடிப்படையில் அவர் தாடி வைத்திருக்கிறார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மேற் குறிப்பிட்ட பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சதானந்தன் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. ஜனூசா நமச்சிவாயம் ஆகிய இருவரும் இம்மாணவன் தாடி வைத்திருப்பதனைக் கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர்.

தாடி வைத்திருப்பதன் காரணமாக பல துஷ்பிரயோகங்களுக்கு குறிப்பிட்ட பீடாதிபதியினாலும் சிரேஷ்ட விரிவுரையாளரினாலும் மாணவன் நுஸைப் கடுமையாக சாடப்பட்டிருக்கின்றார் என்று ஊட‌க‌ செய்திக‌ள் சொல்கின்ற‌ன‌.

இம்மாணவர் விரிவுரைகளுக்கு சென்றிருந்தும் தாடிவைத்திருந்தமை காரணமாக பல சந்தர்ப்பங்களில் விரிவுரைகளில் உட்கார விடாமல் வெளியேற்றப்பட்டிருந்தார். இதனால் பரீட்சைக்கு தோற்றுவதற்கான போதிய வரவு இல்லை என்ற காரணத்தைக் காட்டி தான் பரீட்சை எழுத அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படலாம் என அம்மாணவர் அஞ்சுகிறார்.

சென்ற மே மாதம் 31ம் திகதி பரீட்சை எழுதச் சென்ற இம்மாணவன் தாடியுடன் பரீட்சை எழுத முடியாது என்று சிரேஷ்ட விரிவுரையாளர் ஜனூசா நமச்சிவாய திருப்பி அனுப்பினாராம். இதனால் குறிப்பிட்ட பாடத்தினை அவரால் எழுத முடியாமல் போயுள்ளது.

தாடியோடு வந்தால் எதிர்வரும் ஜூன் மாதம் 19ம் திகதி பரீட்சை எழுதவிருக்கும் மாணவர் நுஸைபை பரீட்சை எழுத விடமாட்டோம் என குறிப்பிட்ட பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளரும் கூறியிருக்கின்றனர். இதனால் ஒரு வருடத்தினை இழக்கும் நிலைக்கு இம்மாணவர் தள்ளப்பட்டிருக்கிறார் என‌வும் செய்திக‌ள் சொல்கின்ற‌ன‌.

இது சம்பந்தமாக மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் சென்ற 1ம் திகதி முறைப்பாடொன்றையும் இம்மாணவர் செய்திருக்கின்றார்.

கலாச்சார அடையாளங்களை அணிவதும் கொண்டிருப்பதும் இலங்கையின் அடிப்படை உரிமைகளில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் என்ப‌தால் இது விட‌ய‌த்தில் கிழ‌க்கு ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ நிர்வாக‌ம் த‌லையிட்டு இரு த‌ர‌ப்பாரையும் விசார‌ணை செய்து அம்மாண‌வ‌ருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க‌ வேண்டும் என‌ கோருகிறோம்.

ஊடகப் பிரிவு,

ஐக்கிய காங்கிரஸ் கட்சி.

2 comments:

  1. தாடி வைப்பது அந்த மாணவனுடைய கல்வியைப் பாதிப்பதாக இருந்தால், அவன் கல்வியை இடையூறுகள் இன்றி தொடர்வதில் அவர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மார்க்கத்தை மடத்தனமாக விளங்கி, அதனை வைத்து இரு சமூகங்களுக்கிடையே குறிப்பாக கல்விச்சமூத்துக்கிடையே முறுகலை ஏற்படுத்த வழிவகுப்பது எந்தவகையிலும் நியாயமில்லை. கல்வியைத் தொடர்வதில் பல்வேறு தடைகள் வரும். அந்த தாடியை அதில் ஒரு தடையாக வைத்துக் கொண்டு கல்வியில் அவன் சாதித்தால் அதனால் அவருக்கும் அவருடைய சமூகத்துக்கும் மட்டுமல்ல அந்த கல்வி நிறுவனத்துக்கும் சக மாணவர்கள் விரிவுரையாளர்களுக்கும் அது முன்மாதிரியாக அமையும். அதனை விட்டுவிட்டு மார்க்கத்தை மடத்தனத்துக்கு கருவியாக மாற்றிக் கொள்ள வேண்டாம். நிச்சியமாக இரு சமூகங்களுக்கிடையே முறுகலையும் விரிசலையும் ஏற்படுத்த தாடி காரணமாக அமைந்தால் அது எந்தவகையிலும் மார்க்கமல்ல. இஸ்லாம் அந்த மார்க்கத்தைப் போதிக்கவில்லை என்பதை அந்த மாணவனும் ஏனையவர்களும் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. தாடி பற்றிய மிகச் சிறந்த பதில் #கிழக்குப்_பல்கலைக்கழக_தாடி_வைத்த #மாணவர் #விவகாரம்:
    கலாநிதி சமீம் சேர் அவர்களின் அழகான விளக்கம்.
    -------------------------------------------------------------------------
    தாடியை வைத்துக் கொள்வது #பர்ழா? சமூகத்தில் ஒரு தாதிய உத்தியோகத்தர் உருவாகி வருவது #பர்ழா?
    எது அவசியம் ? சமூகமே முடிவு செய்.
    எடுத்த எடுப்பில் மோடி, இந்துத்துவம், சிவசேனா என்பதெல்லாம் அபத்தமே.
    சம்பவம் இதோ :
    இந்த மாணவன் சம்பந்தமாக பீடாதிபதி , விரிவுரையாளர் இன்னும் பலருடன் கதைத்தேன் .
    இந்த மாணவன் தாதியர் கல்வி பயிலும் மாணவன். தாதியர் மாணவர்கள் தாடி வைக்க முடியாது. Uniform அணிவது கட்டாயம் இது அனைத்து தாதியர் பயிற்சி நிலையங்களிலும் பின்பற்றும் ஒரு ஒழுக்கம். நான் பல தாதி பயிற்சிகள் மேட்கொள்ளும்போது அவதானித்த ஒரு விடயம் கூட.
    இந்த மாணவன் வேறு ஒரு பல்கலை கழகத்தில் இருந்து கிழக்கு பல்கலைக்களத்துக்கு மாறுதல் பெற்று வந்தவர். இவர் எந்த விதமான பாதுகாப்பு (Hygenic) நடவடிக்கையும் இல்லாமல் உலாவுவதாகவும் இவர் சம்பதமான பல முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் இவருக்கு பலமுறை அறிவுரைகள் கூறப்பட்டதாகவும் அறியக்கிடைத்தது.
    இந்த மாணவன் ஒருசில காலம் பல்கலைக்கழகத்துக்கு செல்லாமல் இருந்ததாகவும் அறியக்கிடைத்தது.
    இந்த மாணவன் வைத்தியசாலை பயிற்சிக்கு (practical) தாடியுடன் சென்றதால் வைத்தியசாலையில் இந்த மாணவனைப்பற்றி முறைப்பாடு கிடைக்கப்பட்டதாகவும் அறியக்கிடைக்கின்றது.
    தாதி கல்வியில் Practical முக்கியமானது விரிவுரைகளை செல்லாமல் இருப்பவர்களை இறுதி பரிட்ச்சைக்கு அனுப்ப முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் .
    இது ஒரு #கலை அல்லது #முகாமைத்துவம் போன்ற கல்வியாக இருந்தால் ஏதாவது உதவிகளை செய்யமுடியும் ஆனால் தாதியர் பயிச்சியில் கூடுதலாக practical இருப்பதால்தான் அவற்றுக்கு சமூகமளிப்பது அவசியம்.
    இந்த குழுமத்தில் உள்ள வைத்தியர்கள் மற்றும் வைத்திய துறை சார்ந்த அறிஞர்கள் உள்ளனர் அவர்கள் தாதியர் ஒழுக்கக்கோவை பற்றி குழுமத்துக்கு தெரியப்படுத்தலாம்.
    நான் அண்மையில் தாதியர் ஒழுக்கக்கோவை ஒன்றை மீள்திருத்தம் (Editting) செய்ததில் பங்குவகித்தேன். ஓரளவு தெரிந்து வைத்துள்ளேன்.
    இது சம்பந்தமாக பீடாதிபதி முஸ்லீம் விரிவுரையாளர்கள் முஸ்லீம் வைத்தியர்களை தொடர்புகொண்டுதான் இந்த மாணவனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்
    நாம் திடீர் முடிவுகளை எடுப்பதை விட மிகவும் நிதானமாக தீர்மானம் எடுப்பது சிறந்தது.

    ReplyDelete

Powered by Blogger.