நீதிமன்றத்திற்கு வாருங்கள்
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை, மீள்குடியேற்றும் போர்வையில் அழிக்கப்பட்ட வில்பத்து காட்டில் மரங்களை மீள நடுவதற்கான நிதியை வழங்காததால், மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அவருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.
மீள்நடுகைக்காக, ஆயிரத்து 67 மில்லியன் ரூபாவை, அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டுமென 2020 நவம்பர் 16 ஆம் திகதி, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இத்தொகையை, இதுவரையில் செலுத்தவில்லை. இதனால், சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் மீண்டுமொரு மனுவைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுசென்றது.
இதனையடுத்தே, நீதிமன்றுக்கு இவர் அழைக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதியரசர் நிஸ்சங்க பந்துல கருணாரத்னவே, முன்னாள் அமைச்சர் றிசாத் பதியூதீனுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இவ்வழக்கு விசாரணைகள் ஜுலை (28) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Post a Comment