Header Ads



பிரான்சில் சிறுவன் கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம்


பிரான்சில் 17 வயது கருப்பின சிறுவனை காவல்துறை சுட்டு கொன்றதை கண்டித்து 3வது நாளாக நடந்த போராட்டத்தில் 200 போலீசார் காயமடைந்தனர். 600 பேர் கைது செய்யப்பட்டனர். பாரிசின் நான்டெர் புறநகர்ப் பகுதியில் காவல்துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை சுட்டதில் காரை ஓட்டி வந்த கருப்பின சிறுவன் நேல்(17) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 


இதனால் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்தனர். வன்முறையில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.


கலவரத்தை கட்டுப்படுத்த 40,000 காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முக்கிய இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் புறநகர்ப் பகுதியான கிளாமர்ட் பகுதியில் வரும் திங்கட்கிழமை வரை, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. மேற்கத்திய உலகம் வளர்க்கும் மிக மோசமான ஒரு அடாவடித்தனத்தின் ஒரு மிக மோசமான செயல் இது. இதனை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது. இந்த இனத்துவேசம் பாதுகாப்புப் படையினரிடம் இருந்தால் துப்பாக்கியைப் பிரயோகித்து கொலை செய்த அந்த பாதுகாவர் ஊழியனை உடனடியாகக் கைது செய்து அவனை இனத்துவேசத்துடன் மேற்கொண்ட கொலையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனைத் தவறினால் பொதுமக்களின் எதிர்ப்பையும் ஆர்ப்பாட்டங்களையும் தவிர்க்க முடியாது. இலங்கையிலும் இந்த மொட்டுப் பேயன்கள், இனத்துவேசத்தை முன்வைத்து இரு இனங்களுக்கிடையில் மீண்டும் முறுகலை ஏற்படுத்தி ஆட்சி அமைக்க முயற்சி செய்கின்றனர் என்ற செய்தி பரவலாகப் பேசப்படுகின்றது. நாட்டை உண்மையாகவே முன்னேற்றும் பணியில் உழைக்க தற்போது பாராளுமன்றத்தில் உள்ள எந்த மகோடிஸ்களும் தயாராக இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட பின்னரும் தேர்தலை வைக்காமல் பாராளுமன்றத்தைக் கட்டியாழும் இந்த பெரும்பாலான இனத்துவேசிகள் தொடர்பாக என்ன செய்ய வேணடும் என்பதை பொதுமக்கள் தான் தீர்மானிக்க வே்ணடும்.

    ReplyDelete

Powered by Blogger.