Header Ads



வினாத்தாளைப் படம் பிடித்து ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி


 பிபில வெல்லஸ்ஸ கல்வி வலயத்துக்கு உட்பட்ட தேசிய பாடசாலை ஒன்றில் பரீட்சார்த்தி ஒருவர் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப்  பரீட்சையில்  தோற்றிய மாணவி ஒருவர், கணிதப் பாட வினாத்தாளைப் படம் பிடித்து வட்ஸ்அப்   மூலம்   ஆசிரியர் ஒருவருக்கு அனுப்பி அவரிடமிருந்து அதற்கான பதிலை பெற்று விடை எழுதிய  சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


சம்பவத்தை அறிந்து கொண்ட பரீட்சை மண்டபத்தில் மேற்பார்வை செய்த  ஆசிரியர் ஒருவர் அது குறித்து மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.


இதனையடுத்து, பிபில வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஜே. சுசில் விஜேதிலகவின் ஆலோசனையின்பேரில் மஹியங்கனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.எஸ்.டி. டயஸ், இந்த மாணவி  பயன்படுத்திய கைத்தொலைபேசியைக் கைப்பற்றியதுடன் இதனுடன் தொடர்புடைய  ஆசிரியரை பிபில கல்வி வலயத்துக்கு  அழைத்து வாக்குமூலம் பெற்றுள்ளார்.


இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குச் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பிபில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.