Header Ads



லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக் கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை


லண்டனின் கிழக்கு பகுதியில் இலங்கை பிரஜை ஒருவரை கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இலங்கையை சேர்ந்த 50 வயதான ரஞ்சித் கன்கனமலகே (Ranjith Kankanamalage) என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். 


தலையில் 12 தடவைகள் சுத்தியலால் அடித்து அவரை கொலை செய்துள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டது.


தலையில் இரு பக்கங்களிலும் தொடர்ச்சியாக தாக்கியதால், மண்டைஓடு வெடித்ததுடன் மூளையும் சேதமடைந்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 38 வயதான சந்தேகநபருக்கு நேற்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக BBC செய்தி வௌியிட்டுள்ளது.


சுயநலத்துடனும் வெறுக்கத்தக்க வகையிலும் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக வழக்கு விசாரணையின் போது நீதிபதி தெரிவித்துள்ளார்.


தனது மனைவி பிள்ளைகளை இலங்கையில் விட்டுவிட்டு, கல்வியை தொடர்வதற்காக 50 வயதான ரஞ்சித் கன்கனமலகே பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார்.


அங்குள்ள  Tower Hamlets கல்லறைக்கு வழமையாக வருகை தரும் ரஞ்சித், அங்கிருந்து 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார். 


கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மனநலம் குன்றியவர் என்பது தெரியவந்தது.


சந்தேகநபர் வௌியில் செல்லும் போது சுத்தியல், பிளேட், திருகாணி போன்றவற்றை கையில் எடுத்துச்செல்வதாகவும், 

தீவிர வன்முறையில் அவர் ஆர்வம் மிக்கவர் எனவும் பின்னர் தெரிய வந்ததாக அந்நாட்டு ஊடங்கள் தெரிவித்துள்ளன. 


சந்தேகநபரின் வீட்டில் சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்து மேலும் பல வகையான சுத்தியல்கள், ரேஸர்களை கைப்பற்றினர். 

1 comment:

  1. இந்த அநியாயமான படுகொலை செய்தவனுக்கு தண்டனை கொடுத்து விட்டுத் திருப்தியடைய முடியாது. இந்த நபர் 50 வயதிலும் தனது குடும்பம் இரு பிள்ளைகளை விட்டு விட்டு படிப்புக்காக வௌிநாடு சென்று இருக்கும் நிலையில் இது போன்ற அநியாய படுகொலையை எந்தவகையிலும் சகிக்க முடியாது. இந்த கொலை செய்த கொலையாளி மனநிலை சரியில்லாதவன் என்றால் அதற்காக அரசாங்கம் இந்த இலங்கையரின் குடும்பத்துக்கு இந்த தாங்கமுடியாத இழப்புக்காக நியாயமான நட்டஈட்டைக் கொடுக்க ஆவண செய்ய வேண்டும். அவரின் பிள்ளைகள் வளர்ந்து அவர்கள் சுயமாக தொழில் செய்யும் வகையில் அவர்களைப் பராமரித்து, கல்விகற்று அவர்கள் ஒரு தரத்தை அடையும் வரை அவர்களுக்கு வாழ்க்கைக்கான செலவுகளும் மாதாமாதம் வழங்கப்பட வேண்டும். இந்தப் பொறுப்பை இலங்கைத் தூதரம் பிரித்தானிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு மரணித்தவரின் குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக லண்டனில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் வெறும் அரசியல் செலவாக்கில் அங்கு சென்று பொறுப்பான எந்த வேலைகளையும் செய்யாமல் அரச செலவில் சட்ட விரோதமாக சகபோகம் அனுபவித்துக் கொண்டிருப்பதாகத் தான் எமக்குத் தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.