Header Ads



தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிவந்த சாமியார் கைது


 லண்டன் Barnet பகுதியில் ஆலயம் ஒன்றை நிறுவி தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிவருகின்ற ஒரு பிரபல்யமான சாமியரை பிரித்தானியக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.


நேற்றைய தினம் கொலின்டேல் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்ற அந்தச் சாமியார் இன்று நண்பகல் வரை விடுதலை செய்யப்படாததானது, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு கடுமையானதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள்.


குறிப்பிட்ட அந்தச் சாமியார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை உறுதியப்படுத்திய காவல்துறை வட்டாரங்கள், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன என்பது பற்றிய தகவல்களை வெளியிட மறுத்திருந்தார்கள்.


இந்தச் சாமியாரை மையப்படுத்திய தீவிர பாலியல் முறைகேட்டுக் காணொளிக் காட்சிகள் வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியிருந்தன.


அந்தக் காணொளிகளை அவரது தரப்பு மறுத்திருந்தது.


 இந்தநிலையில் இலங்கை தமிழர்கள் மூவர் காவல்துறைக்கு வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து கொலின்ல் பகுதி காவல்துறை நேற்று இவரை கைதுசெய்து கடந்த 24 மணிநேரமாக விசாரணைக்கு உட்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.


இவரது கைதை அடுத்து அவரது ஆச்சிரம பக்தர்களிடம் பதற்றமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.


 தற்போது இவருக்கு அதிக நிதியுதவியை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாமென்பதால் இவரை பிணையில் எடுப்பதற்கு அவருக்கு நெருக்கமான சிலர் தீவிர முயற்சியெடுத்து ஓடோடித் திரிவதாக தெரியவருகிறது.


அதேவேளை, கடந்த சில வாரங்களாக குறிப்பிட்ட அந்தச் சாமியரது காணொளிகள் என்று கூறப்பட்டு, சில ஆபாச காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகிவந்தன.


தென்னிந்திய தொலைக்காட்சிகள் சிலவும்  அந்தச் சாமியார் பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுக்களை தமது செய்தி அறிக்கைகளில் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  ibc

No comments

Powered by Blogger.