Header Ads



முஸ்லிம் மீடியா போரத்தின் 26 வது வருடாந்த மாநாடு - தலைவராக NM அமீன் மீண்டும் தெரிவு



- யூ.கே. காலித்தீன் -


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26வது வருடாந்த மாநாடு கொழும்பு 10 தாபலக கேட்போர் கூடத்தில் மர்ஹூம் கலைவாதி கலீல் அரங்கில் (25) நடைபெற்றது. 


இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26வது ஆண்டுக்கான நினைவு மலரும் வெளியிடப்பட்டது.


இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற நிகழ்வில் 2023/24ம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின்  புதிய நிர்வாகத்திற்கு தலைவராக என்..எம். அமீன், செயலாளராக சிஹார் அனீஸ், பொருளாலராக  கல்முனை எம். எம். ஜெஸ்மின், ஆகியோரோடு 


நிறைவேற்றுக்குழு  உறுப்பிணர்களாக 14 பேர் முறையே முன்னாள் தலைவி புர்கான் பீ இப்திக்கார், சாமிலா சரீப், சாதிக் சிஹான்,. இர்சாத் ஏ காதர், எம்.ஏ.எம். நிலாம், எம்.பி.எம். பைருஸ், றிப்தி அலி, ஜாவித் முனவ்வர், எம். சமிஹா, முஸ்தபா மௌலவி, டி.டிம். ராபி, ஜி.எம். நாளிர் ஜமால்டீன், எம். சாஹிர், ஜெம்சித் அசீஸ், எம். றிபாஸ், அஷ்ரப் ஏ சமத் ஆகியோர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு நிறைவு செய்யப்பட்டமை இங்கு  குறிப்பிடத்தக்கது.






No comments

Powered by Blogger.