Header Ads



இலங்கை வரலாற்றில் முக்கிய நிகழ்வு - 12 வருட ஆய்வுக்கு பின்னர் கிடைத்த மகத்தான வெற்றி


புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய மருந்தை கண்டுபிடிப்பதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் சமிரா ஆர். சமரகோன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர் வெற்றியடைந்துள்ளனர்.


12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அறிவியல் ஆராய்ச்சியை தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தியதன் மூலம் இந்த முடிவு எட்டப்பட்டதாக பேராசிரியர் சமீர சமரகோன் தெரிவித்துள்ளார்.


மேலும், இது இயற்கை ஊட்டச்சத்து மருந்து என்றும், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் உள்ளிட்ட சுமார் 15 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியது என்றும் அவர் கூறியுள்ளார் . 


புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், புற்றுநோயில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளுக்கும் இந்த பலன் தரும் என்றும் பேராசிரியர் கூறினார்

No comments

Powered by Blogger.