Header Ads



ஓமான் முதலீட்டாளர் மீதான, தாக்குதல் குறித்து நீதியமைச்சர் கூறுவது


ஓமான் முதலீட்டாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


கட்டான பிரதேசத்தில் ஓமான் நாட்டு முதலீட்டாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், நீதி நிலை நாட்டப்படவில்லை. இதனால், குறித்த முதலீட்டாளர் நாட்டை விட்டு வெளியேற நடவடிக்கை எடுத்து வருகிறார். இது தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று சபையில் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இது தொடர்பில் சபையில் தெளிவுபடுத்திய எதிர்க்கட்சி எம்.பி காவிந்த ஜயவர்த்தன:


ஓமான் நாட்டு முதலீட்டாளருக்கு சொந்தமான ஆடைத் தொழிற்சாலை கட்டான பிரதேசத்தில் இயங்கி வருகிறது. இதில் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 500ற்கும் மேற்பட்டவர்கள் பணி புரிகின்றனர்.  ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொழிற்சாலையின் வெளிநாட்டு முதலீடடாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது தொடர்பில் அவருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.


அதனால் அந்த முதலீட்டாளர் நாட்டை விட்டு வெளியேற நடவடிக்கை எடுத்து வருகிறார். முதலீட்டாளர் நாட்டைவிட்டுச் சென்றால், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் விடப்படும். அதனால், அவருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே எம்பி அது தொடர்பில் தெரிவிக்கையில், முதலீட்டாளர்களை நாட்டுக்கு கொண்டுவர முயற்சித்துவரும் இவ்வேளையில், இருக்கும் முதலீட்டாளர்களை அச்சுறுத்தி நாட்டைவிட்டு வெள்யேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனால் கட்டான பிரதேசத்தில் தொழிற்சாலை அமைத்திருக்கும் ஓமான் முதலீட்டாளருக்கு நீதியை பெற்றுக்கொடுத்து, நாடு தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.