Header Ads



கதவு திறந்தே உள்ளது - சஜித் ஆவேசம்


அரசாங்கத்துடன் கைகோர்க்க நினைப்பவர்கள் தாராளமாகப் போகலாம். கதவு திறந்தே உள்ளது – என சஜித் பிரேமதாஸ தனது கட்சியின் எம்.பிக்களுடான சந்திப்பில் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.


தற்போதைய அரசியல் நிலவரங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றது.


கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இந்த கூட்டம் கூடியது. அதில் ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் அரசாங்கத்தின் பக்கம் தாவுபவர்கள் தொடர்பில் சஜித் ஆவேசத்துடன் தனது நிலைப்பாட்டை வெளியிட்டார்.


எனது கட்சி எம்.பிக்கள் அரசு பக்கம் போகமாட்டார்கள் என்று நான் நம்புகின்றேன். அதையும் தாண்டி யாரும் போக விரும்பினால் நான் அவர்களைப் பிடித்துக்கொண்டு இருக்கமாட்டேன். தாராளமாகப் போகலாம். கதவு திறந்தே உள்ளது சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.