Header Ads



அலி சப்ரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம், ஸ்மார்ட் போன்களின் பெறுமதி வெளியாகியது



இலங்கை சுங்க திணைக்களம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பெறுமதி குறித்த புதுப்பிப்பை இன்று வழங்கியுள்ளது.
3 கிலோவுக்கு மேல் எடையுள்ள தங்கத்தின் மதிப்பு ரூ. 74 மில்லியன். மேலும், அவரது பயணப் பையில் இருந்த 91 ஸ்மார்ட் போன்களை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர், அவற்றின் மதிப்பு ரூ. 4.2 மில்லியன். புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 78 மில்லியன் ரூபா பெறுமதியான அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்களை எடுத்துச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இன்று (23) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர், விமான நிலையத்தில் ஐந்து மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், சுங்கத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.


டுபாயிலிருந்து இன்று முற்பகல் 9.45 அளவில் வருகைத் தந்த விமானத்தின் மூலம், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹிம் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளார்.


இவ்வாறு வருகைத் தந்த பாராளுமன்ற உறுப்பினர், விசேட பிரமுகவர்கள் பிரவேசிக்கும் நுழைவாயிலின் ஊடாக நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 comment:

  1. நாட்டின் சட்டங்கள், குறிப்பாக சுங்கத்துறை, இறக்குமதியுடன் தொடர்பான சட்டங்கள், இறக்குமதித்தடை செய்யப்பட்டவை போன்ற எந்த அறிவும் ஞானமும் இல்லாத கழுதை ஒன்று பாராளுமன்றத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் பிரதிநிதியாக இயங்குகின்றது என்றால் அந்தப்பாவத்தை புத்தளம் தொகுதி வாக்காளர்கள் தான் முதலில் பொறுப்பேற்க வேண்டும். படிப்பறிவு இல்லாத ஆள்பார்வைக் கழுதை செய்யும் அனைத்துக்கும் புத்தள தொகுதி வாக்காளர்கள் முதலில் பதில் சொல்லியாக வேண்டும். நேற்று இவனுடைய கள்ள வேலையை உதாராணமாகக்காட்டி இது போன்ற கள்வர்களால் எங்களுக்கும் கெட்ட பெயர் வருகிறது என மைத்திரியும் புகழ் பெற்ற இன்னொரு கள்வனும் பாராளுமன்றத்தில் தெரிவிக்கும் அளவுக்கு இவனுடைய செயல் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. கேவலத்துக்கு மேல் கேவலம், போதுமடா சாமி!

    ReplyDelete

Powered by Blogger.