Header Ads



சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றவர்கள் விடுதலை, பயண ஏற்பாடு செய்தவர்கள் விளக்கமறியல்


- Ismathul Rahuman -


குடிவரவு, குடிஅகல்வு சட்டத்தை மீறி சட்டவிரோதமாக படகில் அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட போது கைது செய்து நாடு கடத்தப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 33 பேர் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையில்  விடுவிக்க உத்தரவிட்ட நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் குமாரநாயக்க  அந்த பயணத்தை ஏற்பாடு செய்த  ஐந்து நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டார்.


இக்குழுவினர் 2023 ஏப்ரல் மாதம் 11 ம் திகதி வாளச்சேனை காசிவன் கடற்கரை ஊடாக படகில் பயணித்துள்ளதுடன் தொழில்நுட்பக் கோளாரினால் கிரிஸ்மஸ் தீவில் வைத்து அவுஸ்ரேலிய கடலோர பாதுகாப்பும் படையினால் கைது செய்யப்பட்டனர்.


 அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட இவர்கள் விசேட விமான மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.


  குடிவரவு ,குடிஅகல்வு அதிகாரிகள் நடாத்திய விசாரணயின் பின்னர் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களும் விசாரணை செய்த பின்னர் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.


    முறைப்பாட்டை முன்வைத்த குற்றப் புலனாய்வு பிரிவு பிரதான பொலிஸ் பரிசோதகர் சுகத் அமரசிங்க  சந்தேகநபர்களில் இருக்கும் 8, 13, 16 இளம் வயதுடையவர்கள் மூவர் தொடர்பாக தொடந்து நடவடிக்கை மேற்கொள்ளாததினால் அவர்களை பராமறிப்பாளர்களிடம் ஒப்படைக்குமாறும்  விசாரணைகள் முற்றுபெறாததினால் 1 முதல் 5 வரையான சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் கோரினார்.


      இளம்வயதினரை அவர்களுடன் இப்பயணத்தில் இனைந்த தாய்மார்களிடம் ஒப்படைக்குமாறும் ஏனைய சந்தேகநபர்கள் 33  பேர்களையும்  தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையில் விடுவித்துபயணத்தை ஏற்பாட செய்த ஐவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும்  பதில் நீதவான் உத்தரவிட்டார். 


மேலும் அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதனால் இது தொடர்பாக குடிவரவு, குடிஅகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.


     சந்தேகநபர்கள் சார்பாக சட்டதரணி எம்.பி.எம். மாஹிர் முன்னிலையானார்.

No comments

Powered by Blogger.