Header Ads



கொழும்பு நகரம் இராணுவ தளமாக மாறுவதால், சுற்றுலா பயணிகள் பயந்து ஓடும் நிலை


கொழும்பு நகரமானது இன்று இராணுவ தளமாக மாறி வருவதாகவும் இதனால் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பயந்து ஓடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று(15.05.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


மேலும் தெரிவிக்கையில்,“பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக ஜனநாயக நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாதொழிக்க அரசாங்கம் முயற்சித்தது.


சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றாலும் இராணுவ முகாம் போன்று தோற்றமளிக்கும் நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதுடன் பயந்து ஓடுகின்றனர்.


கொழும்பு நகர் இன்று இராணுவ தளமாக மாறுவது குடியரசு நாட்டிற்கு பொருத்தமான சூழ்நிலை அல்ல.  


அரசாங்கம் விரும்பியவாறு பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் இராணுவ நிலைமை இதைவிட பத்து மடங்கு அதிகரித்திருக்கும்.


எதிர்க்கட்சிகளின் வேலைத்திட்டம் மிகவும் பயனுள்ளதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நிறுத்த முடிந்தது.


அடக்குமுறை மற்றும் அடக்குமுறை திருத்த சட்டங்களை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து முறியடித்ததால் தற்காலிகமாக நிறுத்த முடிந்தது.”என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.