Header Ads



ஜனாதிபதி மீது, இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு


உயர் தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவது தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்திக்க  பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் கோரிக்கை விடுத்திருந்த போதும், ஜனாதிபதி அதற்கான சந்தர்ப்பத்தை வழங்காமல் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என இலங்கை ஆசிரியர்  ஒன்றியம் தெரிவித்துள்ளது.


"விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மென்மேலும் மோசமடைந்துள்ளன. சந்திப்புக்கான அனுமதியை நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கோரியிருந்தோம். 


கலந்துரையாடலை நடாத்தாமல் நாட்டிலிருந்து செல்வது நல்லதல்ல. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தடைப்படுவதற்கான காரணம் யார் என்ற கேள்வியே எழுகிறது" என இலங்கை ஆசிரியர்கள் ஒன்றியப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடக சந்திப்பில் எமது சகோதர ஊடகமான டெய்லி மிரருக்கு தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.