யாழ்ப்பாணத்தில் புதிய விகாரை, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
பலாலி காவல் நிலைய பொறுப்பதிகாரி , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட ஐவரின் பெயர்கள் குறிப்பிட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது.
ஒவ்வொருவரும் அமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் செயற்பட வேண்டும். விகாரையின் முகப்பிலேயோ , பாதையிலேயோ தடைகளை ஏற்படுத்தக் கூடாது.
விகாரை வழிபாட்டிற்கு வரும் மக்களுக்கோ , விகாரையில் நடைபெறும் உற்சவங்களுக்கோ , இடையூறு ஏற்படுத்தக் கூடாது என நீதிமன்று கட்டளையாக்கியுள்ளது.
அதேவேளை, திறந்தவர்களது உரித்து ஏதேனும் பாதிக்கப்பட்டு இருப்பின் , உரிய நீதிமன்றில் உரிய வழக்கொன்றை தாக்கல் செய்து , உரிய நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மன்று அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதி மன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என மன்று திகதியிட்டு உள்ளது.
இதேவேளை, வலி.வடக்கு தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு மல்லாகம் நீதவான் காயத்திரி களவிஜயம் மேற்கொண்டு விபரங்களை ஆராய்ந்துள்ளார்.
இதன்போது குறித்த காணிக்கு முன்னுள்ள தனியார் காணியின் எல்லை பகுதியினுள் எவ்வித குழப்பங்கள், கோசங்கள் இன்றி அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என நீதவான் காயத்திரி தெரிவித்ததாக சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment