Header Ads



சர்ச்சைக்குரிய போதகரின் அறிவிப்பு


ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை வரவுள்ளதாக சர்ச்சைக்குரிய பிரசங்கங்களை வழங்கிய கிறிஸ்தவ மத போதகர் ஜெரம் பெர்னாண்டோ  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.


“வணக்கம் குடும்பத்தினரே, நீங்கள் அனைவரும் அறிந்தது போல, நான் முன்பு திட்டமிடப்பட்ட அதிகாரப்பூர்வ பயணங்களில் ஈடுபட்டு வருகிறேன், ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவேன்” என்று ஒரு செய்தியை வெளியிட்டார்.


ஜெரம் பெர்னாண்டோ என்ற கிறிஸ்தவ மத போதகர் ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பிரசங்கங்களை வழங்கிய காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இதையடுத்து, அவர் கடந்த 14 ஆம் திகதி தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


எனினும, ஜெரம் பெர்னாண்டோவுக்கு எதிரான பயணத் தடையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று பெற்றுள்ளனர்.


இந்த நிலையில் தற்போது ஜெரம் பெர்னாண்டோ ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார். 


1 comment:

  1. இந்த கிருஸ்தவ தீவிரவாதியையும் இவனை சார்ந்த கும்பலையும் ஏன் அரசினால் தடை செய்ய முடியவில்லை

    ReplyDelete

Powered by Blogger.